தென்திருப்பேரையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில் பயிற்சி உபகரணங்கள்
1/8/2022 12:37:30 AM
வைகுண்டம், ஜன.8: தென்திருப்பேரையில் மகளிர் குழுவினருக்கு தொழில் பயிற்சி உபகரணங்களை கனிமொழி எம்பி வழங்கினார். ஆழ்வார்திருநகரி, வைகுண்டம் ஒன்றிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆகாய தாமரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்கும் பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா தென்திருப்பேரையில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கனிமொழி எம்பி தலைமை வகித்து தொழிற்பயிற்சி உபகரணங்களை வழங்கி பேசுகையில், பொதுவாக நீர் வழிகளை அடைத்து வளரும் ஆகாய தாமரைகளை பெண்களுக்கு வருமானம் ஈட்டிதரும் பொருட்களாக மாற்றி தருவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் குழுவினர் பயிற்சி பெற்று ஆகாய தாமரையில் இருந்து புதுவிதமாக பொருட்களை தயார் செய்து அயல்நாட்டிற்கு முன்னோடியாக திகழும் அளவிற்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்யும் அளவிற்கு திறமையை வளர்த்து வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சி 6 மாதம் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு 26 வகையான உபகரணங்கள் 60 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் சிறப்பாக பயிற்சி பெற்று 4 பேருக்கு கற்றுக்கொடுக்கும் அளவிற்கு உங்கள் திறமைகளை உயர்த்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வீரபத்திரன், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கருப்பசாமி, பயிற்சியாளர்கள் பீனாராவ், நபார்டு மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் ஒன்றிய செயலாளர்கள் நவீன், பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், தென்திருப்பேரை நகர பொறுப்பாளர் முத்துவீரப்பெருமாள், மகரபூஷணம், ஒன்றிய பிரதிநிதி சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் ராகவன், கடம்பா ரவி, செங்குழி ரமேஷ், ஜெசிபொன்ராணி, சதீஸ், சோபியா மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!