வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு
1/7/2022 12:29:09 AM
நெய்வேலி, ஜன. 7: நெய்வேலி சட்டமன்றத் தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து, இந்திரா நகர், கீழுர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியபனவர் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தார். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள், கிடப்பில் கிடக்கும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் ரத்தினகுமார், தமின்முனிஷா, வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன், இந்திராநகர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் உமா ராமதாஸ், தாவக முன்னாள் கவுன்சிலர் சந்தோஷ்குமார், ஊராட்சி செயலாளர்கள் எழிலரசன், கார்த்திகேயன், வார்டு உறுப்பினர்கள் ராஜபூபதி, நளினி சண்முகம், இளையராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!