தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த விவசாயி பலி
1/3/2022 1:35:06 AM
சத்தியமங்கலம், ஜன.3: பவானிசாகர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார். பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(64). இவர் அருகேயுள்ள திருப்பதி கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மதன்குமார் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளி தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தார்.சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கயிறு கட்டி மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்