மழை இல்லாததால் குறைந்து கொண்டே வரும் வைகை அணை நீர்மட்டம்
12/31/2021 7:29:29 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்ட நிலையில், அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த வைகை அணைக்கு வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்தும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து ஏற்படுகிறது.
இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 3 முறை முழுக்கொள்ளவை எட்டியது. இதில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 3 வது முறையாக முழுக்கொள்ளவை எட்டி அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நாட்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன்பின்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து காணப்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு நீர்வரத்து சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. பின்னர் மழை குறைவால் நீர்வரத்து குறைந்து, தற்போது நீர்வரத்து 449 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70.10 அடியாக இருந்த நிலையில், தற்போது நீர்மட்டம் குறைந்து 68.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து 869 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்ட காரணத்தால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!