SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

12/31/2021 7:20:45 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்கள் மூலம் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேற்று தண்ணீரை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் காளிப்பிரியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், தாசில்தார் சரவணன், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகம், வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி, வேளாண்மை அலுவலர் பிரியா, திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி, பெரியமுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பானுபிரியா நாராயணன், ரஜினிசெல்வம், பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டேம்.பிரகாஷ், கவுரப்பன், நாராயணன், பிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையில் தற்போது உள்ள நீர் அளவினை கொண்டும், நீர் வரத்தினை எதிர்நோக்கியும் வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடி வீதமும் என மொத்தம் 180 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பர்அள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்