புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வர்த்தக ரீதியிலான நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்
12/31/2021 7:17:32 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;2022ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி இன்று இரவு பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத்தலங்களில் அனைத்து நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். அதே போல் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், இன்று இரவு போலீசார் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அதே போல் ரிசார்ட்டுகள், கிளப்புகளில் புத்தாண்டு வர்த்தக ரீதியிலான நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஹோட்டல் ஊழியர்கள் 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தியுள்ளாரா என ஹோட்டல் நிர்வாகம் கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!