புத்தாண்டு கொண்டாட்டம் அத்துமீறக்கூடாது
12/31/2021 7:12:53 AM
ஈரோடு: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இதே போல அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க வாகன சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எந்த வகையிலும் சட்டத்தை மீறாத வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். மேலும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்