வடலூர் காவல் நிலையத்தில் கடலூர் எஸ்பி ஆய்வு
12/31/2021 12:48:29 AM
குறிஞ்சிப்பாடி, டிச. 31: வடலூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய படைக்கலன், ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகளை மேற்கொண்டார். காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரோந்து பணிகள், கண்காணிப்பு பணிகள் ஆகியவற்றை தீவிரப்படுத்துதல் மூலம் குற்றங்களை தடுக்க வேண்டும். பணியின் போது பொதுமக்களிடம் நல்லுறவைப் பேணி காக்க வேண்டும். கொரோனா தொற்று காலமென்பதால் பொதுமக்கள் கூட்டம் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என அறிவுரை கூறினார். மேலும், காவல்நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், காவலர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.இதில், நெய்வேலி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் வீரமணி, உதவி ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!