கஞ்சா, குட்கா புழக்கத்தில் விடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
12/30/2021 5:29:15 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வீ.வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் தலைமுறையினரை போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கையை சீரழித்து வரும் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி புழக்கத்தை வேரோடு ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இல்லாமல் காவல் துறையை அணுகி அது பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட எஸ்பி யால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 6379 904848 என்ற பிரத்யோக தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, குட்கா விற்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி புழக்கத்தை அறவே ஒழிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் மேற்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது பற்றி தெரிந்தால் மாவட்ட போலீஸ் எஸ்பி யின் பிரத்யோக எண் 6379904848 என்ற தொலைபேசி எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்பி வீ.வருண்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை
பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!