SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் மாவட்ட பொறுப்பாளர் பேச்சு

12/28/2021 6:57:00 AM

கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன் தலைமையில் நேற்று நடந்தது. மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர்.காஞ்சனா கமலநான், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இதில், பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்த நாளை ஒராண்டு முழுவதும் கொண்டாடுவது. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது. உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற அயராது பாடுபடுவது.

பொங்கல் திருநாளன்று மாவட்டம் முழுவதும் புதிய கொடிகளை ஏற்றி, பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்குவது.  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு தடுப்பணை, வலது, இடதுபுற கால்வாய் வெட்டி காய்ந்து போன ஏரிகளை நிரப்புகிற திட்டம், ஊத்தங்கரையில் நவீன அரசு மருத்துவமனை, கிரானைட் பூங்கா அமைக்கும் திட்டம், கிருஷ்ணகிரி நகராட்சியில் 2ம் பகுதி பாதாள சாக்கடை அமைக்கும் திட்டங்களை நிறைவேற்ற, முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் தட்ரஅள்ளி நாகராஜ், சாவித்திரி கடலரசு மூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தம்பிதுரை, ராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, நரசிம்மன், கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை நாகராஜ், சீனிவாசன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி, கோவிந்தராசு, சாந்தமூர்த்தி, எக்கூர் செல்வம், சுவாமிநாதன், நிர்வாகிகள் பாபு, பாபுசிவக்குமார், பாலன், கவிதா கோவிந்தராசு, ரஜினிசெல்வம், செந்தில், மணிவிஜயன், பரிதாநவாப், நாராயணமூர்த்தி, தொமுச கிருஷ்ணன், வெங்கடப்பன், ஆதிமகேந்திரன், டாக்டர்.மாலதி நாராயணசாமி, குப்புராஜ், ராமச்சந்திரன், திருமலைச்செல்வம், அஸ்லாம், டேம்.பிரகாஷ், வாசுேதவன், குமார், தண்டபாணி, மோகன், கலைவாணி, கவுரி, புனிதவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்