SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாகரல் கண்டிகை கிராமத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

12/28/2021 4:38:28 AM

ஊத்துக்கோட்டை, டிச.28: மாகரல் கண்டிகை கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் பங்கேற்று ஏழை எளியோருக்கு வழங்கினார். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாகரல் கண்டிகை கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமை தாங்கினார்.

மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வி.ஜெ.சீனிவாசன், எம்.குமார், பி.ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், டி.பாஸ்கர், லோகநாதன், அன்பு, தர், சுப்பிரமணி, நாராயணசாமி, ஆளவந்தான், உமா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.சுப்பிரமணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் 200  ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு, எண்ணெய் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர், மாகரல் கண்டிகை கிராமத்தில் ஏரிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்