திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பெண் குணமடைந்தார் நாளை டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை
12/28/2021 4:18:04 AM
திருவண்ணாமலை, டிச.28: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்துள்ளதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக, ஒன்றியக்குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு வந்த 38 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நடத்திய பரிசோதனையில், அப்பெண்ணின் தந்தைக்கும் ஒமிக்ரான் உறுதியானது.
எனவே, கடந்த 17ம் தேதி முதல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதையொட்டி, அந்த வார்டில் 24 மணிநேரமும் மருத்துவ குழுவின் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை விபரங்கள், முன்னேற்றங்கள் குறித்து தினமும் தமிழக சுகாதார துறைக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் தொற்று கண்டறியும் பரிசோதனை நடந்தது.
அதன் முடிவு நேற்று வெளியானது. அதில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை (நெகடிவ்) என்பது தெரியவந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில் ஆக்சிஜன் தேவை எதுவும் இல்லாமல் முழுமையாக குணமடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர். எனவே, மேலும் 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து, நாளை டிஸ்சார்ஜ் செய்ய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் தந்தைக்கு நேற்று மீண்டும் தொற்று கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று வெளியாகும் என தெரிகிறது. அவருக்கும் தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தால், 2 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.
செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!