திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம்
12/27/2021 5:41:11 AM
திருமலை, டிச.27: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம் செய்தார். சித்தூர் மாவட்டம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பாலிவுட் நடிகை ஜான்விகபூர் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். இந்நிலையில், நேற்று காலை விஐபி தரிசனத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்தபோது நடிகை ஜான்வியை பார்த்த அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஜான்விகபூர் தற்போது ‘தோஸ்தானா-2' மற்றும் ‘குட்லாக் ஜெர்ரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆண்டுதோறும் ஏழுமலையானை தரிசனம் செய்வார். அதேபோல், தன் தாயை போல் நானும் ஏழுமலையானை மிகவும் விரும்புகிறேன். அவர் சன்னதியில் தான் திருமணம் செய்து கொள்வேன் என ஜான்விகபூர் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.
செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!