மதுரை மாவட்டத்தில் நாளை 1,200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
12/25/2021 2:17:09 AM
மதுரை, டிச. 25: மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் அறிக்கை: மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் என 1200 இடங்களில் நாளை (டிச.26) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களுக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி போடப்படும். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நிரம்பியவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களும், இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், கொரோனா 3வது அலை பரவலை தடுக்க மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்