எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
12/25/2021 1:50:49 AM
ஈரோடு, டிச.25: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் அவரது சிலைக்கு அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சித் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அண்ணா, பெரியார் ஆகியோரது சிலைகளுக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பெரியார் நகர் பகுதிச்செயலாளர் மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!