எம்ஆர்கே கல்லூரியில் சிறப்பு கருத்துரையரங்கம்
12/25/2021 12:22:53 AM
காட்டுமன்னார்கோவில், டிச. 25: காட்டுமன்னார்கோவில் அருகில் பழஞ்சநல்லூரில் உள்ள எம்ஆர்கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் சிறப்பு கருத்துரையரங்கம் வணிகவியல் கல்வியின் வழி தொழில் வளர்ச்சி\” என்னும் தலைப்பில் நடைபெற்றது. எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.ஆர்.தெய்வசிகாமணி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் பழனிவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் கலந்து கொண்டு வணிகவியல் துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்பு குறித்து கருத்துகளை வழங்கினார்.
வணிகவியல் துறை தலைவர் திருநாவுக்கரசு வரவேற்புரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ராம்சன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் பிரகாஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பேராசிரியர்கள் பயன்பெற்றனர்.
மேலும் செய்திகள்
கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு
வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி
நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்
கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
உடல்நலக் குறைவால் இறந்த குரங்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!