உரப்பனூர் கண்மாய் மடை உடைந்ததால் நெல் வயல்களில் புகுந்தது தண்ணீர் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
12/24/2021 5:17:35 AM
திருமங்கலம், டிச. 24: திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கண்மாய் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. தொடர்ந்து வைகையாற்றிலிருந்து தண்ணீர் வருவதால் கண்மாய் தண்ணீர் மற்ற கண்மாய்களுக்கு செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை கண்மாயின் மூன்றாம் மடை பகுதியில் தண்ணீர் திறக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மடையின் ஷெட்டர் பகுதியில் உடைப்பு ஏற்படவே கண்மாய் தண்ணீர் அருகேயுள்ள நெல் வயல்களில் பாய்ந்தது. மடையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய விவசாயிகள், பொதுமக்கள் முயன்றனர்.
ஆனால் தண்ணீரின் வேகம் அதிகளவில் இருந்ததால் அவர்களால் சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் ஆர்டிஓ அனிதா உடனடியாக உடைந்த மடை பகுதியை சரிசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து உரப்பனூர் ஊராட்சி தலைவர் யசோதை, விஏஓ ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். தொடர்ந்து மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பு சரிசெய்யப்பட்டது. இருப்பினும் கண்மாய் தண்ணீர் நெல் வயல்களில் பாய்ந்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!