வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
12/23/2021 9:30:38 AM
சேந்தமங்கலம், டிச.23: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு உதவி அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கலந்து கொண்டு பிளஸ் 2 மாணவிகள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம், அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளுதல், வேலைவாய்ப்பு சம்பந்தமான தேர்வுகளில் தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு, அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வுகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
ஆவத்திபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கேட்டு பெற்றோர்கள் தர்ணா
களங்காணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இளம் கதை சொல்லி விருது
வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்
போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹17.5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!