வீடு, ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பு
12/23/2021 9:24:50 AM
ஊட்டி, டிச. 23: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பல்வேறு குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் அல்லது மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளிலும் தற்போது கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பலரது வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடில்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு சித்திரிக்கும் வகையில், பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரியம் மாறாமல் சாம்பிராணி மரங்கள், பச்சை பாசிகள் மற்றும் தெர்மோ கோல் ஆகியவைகளை கொண்டு இந்த குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மின் விளக்குகளும் ஒளிர்கின்றன.அழகான இந்த குடில்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் அதன் அருகே நின்று செல்பியும் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு
ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன
பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு
மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!