ஆருத்ரா தரிசன விழா
12/22/2021 5:12:57 AM
திருச்சுழி, டிச.22: திருச்சுழியில் திருமேனிநாதர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு மூலவர் உலாவீதி நடைபெற்றது. வருடாவருடம் மார்கழி மாதம் வரும் திருவாதிரை தினத்தில் விரதம் கடைபிடித்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தமிழக முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சுழியில் உள்ள பழமை வாய்ந்த திருமேனிநாதர் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருமேனிநாதர், சகாயவள்ளி சுவாமிகள் வீதியில் உலா வந்து பக்தர்கள் காட்சியளித்தனர். ஆருத்ரா விழாவில் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்