சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் சொந்த செலவில் தார்சாலை அமைத்து கொடுத்த திமுக நிர்வாகி
12/21/2021 6:07:50 AM
கோவை, டிச. 21: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட குழி தோண்டப்பட்டதால் சாலையின் இருபக்கங்களிலும், குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. அத்துடன், பாலத்தின் பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது.
தற்போது பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் தினசரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மேம்பாலத்தின் பணிகள் நடைபெறாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும், அப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தற்போது, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் துவங்கியுள்ளது.இதற்கிடையில், குண்டும், குழியுமாக இருந்த பாலத்தின் ஒருபுற சர்வீஸ் சாலையை தனது சொந்த செலவில் சீரமைத்து, தார்சாலை அமைக்கும் பணியை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் சக்தி சீனிவாசன் மேற்கொண்டார். அதன்படி, சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு தார்சாலை அமைத்து கொடுத்துள்ளார். இப்பணி தற்போது நிறைவுபெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இச்சாலையை, திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் நேரில் பார்வையிட்டு, சக்தி சீனிவாசனுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது மக்களுக்காக தன் சொந்த செலவில் சக்தி சீனிவாசன் தார்சாலை அமைத்து கொடுத்துள்ளார். இது, பெரும் வரவேற்புக்குரியது. இதன்மூலம், நாங்கள் பட்ட கஷ்டம் மற்றும் சிரமம் முடிவுக்கு வந்துள்ளது. சக்தி சீனிவாசன் ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பல பேருக்கு மருத்துவ உதவி வழங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சொந்த செலவில் தார்சாலை அமைத்து கொடுத்துள்ளார்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!