திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் 30 கோடியில் திருப்பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
12/18/2021 12:39:59 AM
சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயிலில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் அம்மனை தரிசனம் செய்து, கோயில் வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபம் மற்றும் சன்னதி தெருவில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது, கோயிலை சுற்றிலும் அதிகளவு குப்பை குவிந்திருப்பதாக கோயில் இணை ஆணையரை கண்டித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கடந்த 7 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெறவில்லை. இக்கோயிலில் முடி திருத்த கூடம் நவீனப்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக அன்னதான கூடம், கோசாலை அமைக்கப்பட உள்ளது. திருமண மண்டபம் சீரமைக்கப்படும். கோயிலை சுற்றிலும் குவிந்துள்ள குப்பையை அகற்ற கூறியுள்ளோம். இங்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இக்கோயிலில் உபயதாரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 30 கோடியில் திருப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இப்பணிகளுக்கு வரும் ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது. திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் நிதி வரும் என நம்புகிறோம். இல்லையெனில், தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி, அப்பணிகள் குறித்த காலத்தில் நடைபெறும். புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்