சுசீந்திரத்தில் கருட தரிசனம் பக்தர்கள் பரவசம்
12/16/2021 3:16:40 AM
சுசீந்திரம், டிச.16: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3ம் திருவிழாவன்று இரவு மக்கள் மார் சந்திப்பு நடந்தது. 4ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருதல் ஆகியவை நடந்தது. 5ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி தரிசனமும் நடந்தது. தொடர்ந்து 6 மணிக்கு கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தாணுமாலயன் சுவாமி கோயில் அருகே உள்ள வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.
அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுவாமிகளையும், கோயில் ராஜ கோபுரத்தையும் வலம் வந்தது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு 10.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, திருவீதியுலா, 10.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. 6ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தாடர்ந்து 9ம் திருவிழா (19ம் தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!