சார்பு நீதிபதி பேச்சு ஆதனூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
12/14/2021 1:12:53 AM
பெரம்பலூர்,டிச.14: பெரம்பலூர் அருகே ஆதனூரில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என கூறி டிஎஸ்பி வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் நேற்று முன்தினம் இரவு ஆலத்தூர் தாலுகாவில் ஆதனூர்-குன்னம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஆதனூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, குளத்தூர், தெற்குத்தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் சரத்குமார் (21), கோவை மாவட்டம், காரமடையை அடுத்த காண்ணார் பாளையம் ஆரோக்கிய சாமி மகன் செபஷ்டி ராஜேந்திரன், திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, அழுந்தலைப்பூர், பரமசிவம் மகன் மாவேந்தன்(21) என தெரியவந்தது.
டிஎஸ்பி அவர்களை பிடித்து சோதனையிட்டதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்தார். அவர்களிடம் போலீசார் விசாரிக்கும் போது, அங்கு திரண்டு வந்த கிராம மக்கள் 3 பேரும் 6ம்தேதி இதே ஊரைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (52) என்பவரிடம் 3 பவுன் செயின், கால் பவுன் தோட்டினை பறித்துச் சென்றவர்கள். அவர்களை விடமாட்டோம். இவர்களிடம் இங்கேயே வைத்து விசாரிக்க வேண்டும். என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் டிஎஸ்பி ஜீப்பின் முன் நின்று வழிவிடாமல் முற்றுகையிட்டனர். தகவல் தெரிந்து, சப்.இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் மக்களிடம் சமாதானம் செய்து 3 பேரையும் பெரம்பலூர் அழைத்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!