சீர்காழியில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்
12/14/2021 1:10:52 AM
சீர்காழி, டிச.14: சீர்காழியில் உலக நன்மை வேண்டி விஸ்வாஸ் சத்சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாபாரதத்தில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். தேவி, பூதேவி சமேத விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அதன்படி பக்தர்கள் ஒன்றிணைந்து சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. முன்னதாக திருஇந்தளூரில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சகஸ்ரநாமம் முற்றோதல் தொடங்கியது. டாக்டர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
ஜெயின் சங்க நிர்வாகி கியான்சந்த் முன்னிலை வகித்தார்.விஸ்வாஸ் நிறுவனர் சென்னை தரன், நிர்வாக இயக்குனர்கள் கிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன், டாக்டர் ராமபத்திரன், டாக்டர்.கோதண்ராமன், கிரிஜா, சுஜாதா, சீனிவாசன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று மந்திரங்களை பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சீர்காழி விஸ்வாஸ் சங்க அமைப்பாளர்கள் சியாமளா, சௌமியா, விஜயலெட்சுமி செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். முடிவில் அமைப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்