ரூ.1.57 கோடியில் அரசு கட்டிடங்கள் திறப்பு: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
12/9/2021 1:16:17 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை க.சுந்தர் எம்ஏல்ஏ திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர், திணையாம்பூண்டி, சித்தனக்காவூர் ஆகிய கிராமங்களில், ஊராட்சி மன்ற கட்டிடங்கள், பென்னலூர், கட்டியாம்பந்தல், மலையங்குளம், பழவேரி, பினாயூர், சித்தனக்காவூர் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், ஆதம்பாக்கம் மற்றும் மதூர் கிராமங்களில் பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 57 லட்சத்தில் கட்டப்பட்டன. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணை தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சேஷாத்ரி, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில், மாவட்ட குழு உறுப்பினர் பத்மா பாபு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வீட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை
மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுக்கு குட்பை: விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
சிஐடியு ஆர்ப்பாட்டம்
தந்தையை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் சுற்றிவளைத்து கைது
கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!