SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெசவாளர் சங்கங்கள் பெடரேஷன் கோரிக்கை மனைவியை பிரிந்தவர் தற்கொலை

12/8/2021 6:08:54 AM

ஆர்.எஸ்.மங்கலம், டிச.8: மனைவியை பிரிந்தவர், களைக் கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.     ஆர்.எஸ்.மங்கலம் அருகே குமிழியேந்தல் கிராமத்தை சேர்ந்த ராமு மகன் நாகலிங்கம்(40). இவர் தனது தாயார் ரெத்தினம்மாளுடன் தேவகோட்டையில் உள்ள ராம்நகர் தால்சா ஊரணி பகுதியில் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து 10 ஆண்டுகளாக காளையார்கோவிலில் வசித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் மேட்டுகற்களத்தூரில் உள்ள தனது உறவினரின் இறப்பு நிகழ்விற்கு சென்ற அவர், குமிழியேந்தலுக்கு வந்து மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் நாகலிங்கம் இறந்து விட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

தொண்டி, டிச.8: தொண்டி பகுதிகளில் அதிகளவில் கால்நடைகள் திரிகின்றது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பது குறித்து தினகரனில் விரிவான செய்தி நேற்று முன்தினம் வெளியானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை தங்கள் வீடுகளில் கட்டி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ரோடுகள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மாடுகள் திரிந்தால் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கால்நடைகள் பாதுகாப்பாக பிடிக்கப்படுவதோடு உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மேலும் பராமரிப்பு செலவாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படும். பிடிக்கப்படும் கால்நடைகளை 7 நாள்களுக்குள் விடுவிக்கப்பட வில்லை என்றால், புளு கிராஸ் சொசைட்டி அல்லது அருகில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கபடும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்