மாவட்டம் முழுவதும் 220 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
12/8/2021 6:08:41 AM
ராமநாதபுரம், டிச.8: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு தொடர்பாக 220 முகாம் நடத்தப்பட உள்ளன என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.கால்நடை பராமரிப்புத் துறையில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திட்டத்தின் கீழ் டிசம்பர்-2021 முதல் மார்ச் 2021க்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம் வீதம் 220 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிராமங்களில் நடத்தப்படவுள்ள கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழுநீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு, நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள், கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புக்கலவை இலவசமாக வழங்கப்படும். சிறந்த முறையில் கலப்பின கிடேரி கன்றுகளை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் இம்முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மண்டபம் வந்த மீனவர்கள்
வாளுடன் சுற்றிய வாலிபர் கைது
பஸ் டிரைவர் கைது
மீன்பிடி தடைக்கால நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்
அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை
திருவாடானை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோர காய்கறி கடைகள்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!