ரவுடிகளை கொல்ல முயன்ற 17 வயது சிறுவன் சிக்கினான்
12/8/2021 12:05:11 AM
ஆவடி: கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவுடி அரவிந்தன்(24). கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருமுல்லைவாயல் மேட்டு தெருவை சேர்ந்த ரவுடிகள் ஆகாஷ்(25), கொரட்டூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரசாந்த்(27), அவரது தம்பி மணி(25) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய மூவரும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று மாலை பாடிக்கு சென்று ெகாண்டிருந்தனர்.
அப்போது, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட அரவிந்தனின் தந்தை ரவி சகோதரர்களும், ரவுடிகளான அப்புன்ராஜ்(32), விவேக்(30) ஆகியோர் ஆகாஷ், பிரசாத், மணி ஆகியோரை சரமாரியாக வெட்டி கொல்ல முயன்றனர். இதில், மூவருக்கும் பலத்த காயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில், கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்புன்ராஜ்(32), விவேக்(30), ரவி(65) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பசுமை பயண விழிப்புணர்வு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
திருக்கண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!