வீட்டை உடைத்து கொள்ளை
12/8/2021 12:03:57 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் பிராமண தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (48). இவரது மனைவி புனிதா (39). மஹேந்திரா தொழில் பூங்காவில் வேலை செய்கின்றனர். நேற்று காலை 2 பேரும், வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 7.5 சவரன் நகை, 6 ஜோடி கொலுசு, ₹30 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வீட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை
மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுக்கு குட்பை: விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
சிஐடியு ஆர்ப்பாட்டம்
தந்தையை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் சுற்றிவளைத்து கைது
கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!