மந்திவலசை தடுப்பணை சேதம் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
12/6/2021 5:16:17 AM
பரமக்குடி, டிச.6: வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட மழைநீர் பரமக்குடி வைகை ஆற்றிலும், வலது இடது பிரதான பாசன கால்வாய்களில் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பரமக்குடி, நயினார்கோவில் மற்றும் போகலூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வைகை ஆற்றின் கரையோரம் மற்றும் கால்வாய் கரையோரம் உள்ள கிராமங்களில் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மந்திவலசை ஆற்று பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையில் விரிசல் ஏற்பட்டு உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, எம்எல்ஏ முருகேசன் தடுப்பணைக்கு சென்று பார்வையிட்டார். கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்து உடனடியாக விரிசலை சரி செய்யும் பணியில் வருவாய்த்துறையினரை ஈடுபடுத்தினார். இதனை தொடர்ந்து தடுப்பணையில் வருவாய் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆய்வின்போது, கோட்டாட்சியர் முருகன், பரமக்குடி தாசில்தார் தமீம் ராஜா,போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன், போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் உடன் சென்றனர்.
மேலும் செய்திகள்
தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு பரமக்குடி கண்காட்சியில் தகவல்
தமுமுக நிர்வாகிகள் எஸ்பியிடம் மனு
பரமக்குடி அருகே நில மோசடி புகாரில் 3 பேர் மீது வழக்கு
ராமேஸ்வரத்தில் கொலையான மீனவ பெண் குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்தனர் வாக்குறுதிகளை உறுதி செய்தார் எம்எல்ஏ
தந்தைக்கு மிரட்டல் விடுத்த மகன்
மனநலம் பாதித்த மூதாட்டி அடித்து கொலை வாலிபர் கைது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!