பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில்நிலையத்தில் போலீசார் ‘அலர்ட்’
12/6/2021 5:13:34 AM
மதுரை, டிச. 6: நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ரயில்நிலையத்தில் நேற்று போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பொன்னுச்சாமி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் எஸ்ஐ சுந்தர்ராஜன் முன்னிலையில், போலீசார் ரயில்வே நிலைய பிரதான நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் முதல், இரண்டாம், மூன்றாம் நடைமேடைகளில் கண்காணிப்பை அதிகரித்தனர். மேற்கு நுழைவு வாயிலிலும் சோதனை தீவிரமாக நடந்தது. ரயில் நிலைய பகுதிகளை ரயில்வே போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
மேலும் செய்திகள்
மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்
பாப்பாபட்டியில் ரூ.1.33 கோடி மதிப்பு திட்ட பணிகள் துவக்கம்
தூம்பக்குளம்புதூரில் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய் பாதித்தவருக்கு ‘ரோபோ’ உதவியுடன் ஆபரேஷன்
10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
பிளஸ் 2 தேர்வுகள் 34,041 பேர் எழுதினர்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை