அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பிரிவு கொண்டுவர வேண்டும்
12/5/2021 2:49:02 PM
குளித்தலை, டிச.5: அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பிரிவு கொண்டுவர அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வழங்கினார். அப்போது வாகனத்தில் வந்த அமைச்சரிடம், குளித்தலை காவேரிநகர் எதிரே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு வரலாற்றுப் பிரிவு மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், நாங்கள் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பிரிவில் படிக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் 100 மாணவிகள் வரலாற்று பிரிவில் படித்து பள்ளியை விட்டு வெளியே செல்கின்றோம். ஆனால் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவு இல்லாததால் நாங்கள் திருச்சி மற்றும் கரூர் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் பொருட்செலவும், காலவிரையமும் ஏற்படுகிறது. குளித்தலை தொகுதியில் முதன்முதலாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த அரசு கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளி மாணவிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்