சமுதாய நல்லிணக்க செயலுக்கான 2022ம் ஆண்டு கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
12/4/2021 7:11:53 AM
சென்னை, டிச.4: சமுதாய நல்லிணக்க செயலுக்கான 2022ம் ஆண்டு கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் தலா ₹20 ஆயிரம், ₹10 ஆயிரம், ₹5 ஆயிரம் தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தை பெற தகுதியுடையவர்கள்.
இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதளமான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஷெனாய் நகர் நீச்சல் குளத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 2022ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனைத்தும் 4 நகல்கள் மற்றும் தற்போது எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், ஷெனாய் நகர் நீச்சல் குளம், 30, கிழக்கு கிளப் சாலை, ஷெனாய் நகர், சென்னை-600030 என்ற முகவரிக்கு வரும் 8ம் தேதிக்குள் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-26644794 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு
ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!