வீட்டுக்குள் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் கரைபுரண்டு ஓடிய மழைநீரால் மண் அரிப்பு: கலெக்டர் தகவல்
12/4/2021 7:05:37 AM
கூடுவாஞ்சேரி, டிச.4:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் கடந்த வாரம் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஜெகதீஷ் நகரில் வசிக்கும் குணசேகரன் என்பவரது 4 அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 7 குடும்பத்தினர், அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இதையறிந்ததும், தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் நேற்று அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அப்பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் கலெக்டர் ராகுல்நாத், செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புக்கும், அதனை ஒட்டியுள்ள மற்றொரு வீட்டுக்கும் இடையே நீர்வரத்து கால்வாய் உள்ளது. தற்போது மழை வெள்ளம் அதிவேகமாக கரைபுரண்டு ஓடியதால், மணல் அரிப்பு ஏற்பட்டு ஜெகதீஷ் நகரில் உள்ள வீட்டில் பள்ளம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் கால்வாய் அகலப்படுத்த வழி விடும்படி பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இப்பகுதியில் தண்ணீர் வற்றியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகரில் கலெக்டர், எம்எல்ஏ, ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் குணசேகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் உட்பட பலர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
வீட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை
மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்களுக்கு குட்பை: விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
சிஐடியு ஆர்ப்பாட்டம்
தந்தையை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் சுற்றிவளைத்து கைது
கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!