திருப்பூர் அரசு மருத்துமனையில் தயார் நிலையில் ஒமிக்ரான் வார்டு
12/4/2021 12:52:45 AM
திருப்பூர், டிச.4: திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வீரியமிக்க ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால், உலக முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் பரவியதையடுத்து, ஒன்றிய, மாநில அரசுகள், இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வெளிநாட்டு பயணிகள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
கணவரிடம் ஜீவநாம்சம் பெற்றுத்தரக்கோரி இளம்பெண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
‘நெஞ்சுக்கு நீதி’ சினிமா பார்த்த அமைச்சர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதியோர்களை பராமரிக்க ஏற்பாடு
85 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1,121 பேர் ‘ஆப்சென்ட்’
ஊத்துக்குளியில் இன்று மின்தடை
திருப்பூர் பெரியார் காலனியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார மையம் எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்