மாற்றுத்திறனாளிகள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் டிச.20 கடைசி நாள்
12/3/2021 1:53:03 AM
திண்டுக்கல், டிச. 3: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டில் கைகள்- கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத- வாய் பேச இயலாத மாற்றத்திறனாளிகள் இலவச தையல் மிஷின் பெறலாம். மேலும் இதற்கு மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதம் மனவளர்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் பயனடையலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்- 1, ஆதார் அட்டைநகல்- 1, தையல் பயிற்சி சான்று- 1, குடும்ப அட்டை நகல்- 1 ஆகியவற்றுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் டிச.20ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 0451-2460099 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கண்வலி கிழங்கு விதைகளை கொள்முதல் செய்திட வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் தமிழக எம்பிக்கள் கடிதம்
நடுவனூரில்
திண்டுக்கல் ஜங்ஷனில் மரக்கன்று நடும் விழா
பழநியில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
நத்தத்தில் காங்கிரசார் நடைபயணம் துவக்கம்
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!