SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் விரைவில் மாடி தோட்டங்களுக்கு காய்கறி விதை விநியோகம் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் தகவல்

12/3/2021 1:52:53 AM

கொடைக்கானல், டிச. 3: தமிழகம் முழுவதும் வீடுகளில் மாடி மற்றும் வெளிப்புற தோட்டங்கள் அமைக்கவும், அதற்கான விதைகள்  கொடுக்கவும் ேதாட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் காய்கறி விதை தொகுப்பு தயாரிக்கும் பணி நடந்து  வருகிறது. கொடைக்கானல் பண்ணைகளில் நடந்து வரும் இப்பணிகளை நேற்று  தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி ஆய்வு நடத்தினார். பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் வீடுகளில் மாடி  தோட்டங்கள், வெளிப்புற தோட்டங்கள் மூலம் காய்கறி உற்பத்தியை  மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதற்கான  உத்தரவை விரைவில் வெளியிட உள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளை  பொதுமக்களே உற்பத்தி செய்து அவர்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும். அரசு உத்தரவையடுத்து வீட்டு மாடி, வெளிப்புற  தோட்டங்களில் காய்கறிகள் பயிரிடுவதற்கு உரிய விதைகளை தோட்டக்கலைத்துறை  வழங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து  உள்ளேன். கொடைக்கானலில் வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள மலர் கண்காட்சி  விழாவிற்கு பிரையன்ட் பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடும் பணி முதற்கட்டமாக துவங்கியுள்ளது. மலர் கண்காட்சியை சிறப்பாக நடத்த உரிய ஏற்பாடுகளை  தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்