SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எந்த அடிப்படை வசதியுமே எங்களுக்கு செஞ்சு தரலீங்க... கன்னிவாடி ஆல்டா நகர் மக்கள் கண்ணீர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

12/3/2021 1:52:47 AM

சின்னாளபட்டி, டிச. 3: கன்னிவாடி ஆல்டா நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னிவாடி பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட  காவலர் குடியிருப்பு அருகே ைஹவேவிஸ் பாதையில் குடியிருந்த ஆதிதிராவிடர்  மக்களுக்கு கடந்த 2011ல் திமுக ஆட்சியின் போது வீடுகள் கட்டி வாழ  மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் இடம் ஒதுக்கி தரப்பட்டது. தொடர்ந்து குடிசை  வீடுகள் அமைத்து, அப்பகுதிக்கு ஆல்டா நகர் என பெயரிட்டு குடியிருந்து  வந்தனர். அதன்பின் வந்த அதிமுக ஆட்சியிடம், இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு  கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. பேரூராட்சி பகுதி என்பதால் பொது நிதியில் இருந்து ஒரு  ஆழ்துளை கிணறு மட்டும் அமைத்து கொடுத்தனர். இதிலிருந்து வரும் தண்ணீரையே  இப்பகுதி மக்கள் குடிக்க பயன்படுத்துகின்றனர்.

மற்றபடி  இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. பொது  கழிப்பறை இல்லாததால் ஆண்கள், பெண்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக  பயன்படுத்துகின்றனர். வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளின் முன்பு கழிவுநீர்  தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி கூடமாக  மாறி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை அமைக்காததால்  தெருக்கள் சேறும், சகதியுமாக கிடக்கிறது. இங்குள்ள சேதமடைந்த மின்கம்பத்தை  அகற்ற கோரி கடந்த 2 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. கன்னிவாடியில் இருந்து நான்கு வழிச்சாலையை அடைந்து  அங்கிருந்து கன்னிமார் ஓடை வழியாகத்தான் ஆல்டா நகருக்கு வர முடியும்.  தற்போது தொடர்மழையால் கன்னிமார் ஓடையில் தண்ணீர் வருவதால் சிறியவர்கள்  முதல் பெரியவர்கள் வரை நனைந்தபடிதான் சென்று வரும் நிலை உள்ளது.

மேலும்  ஓடையில் தண்ணீர் வரத்தால் இப்பகுதி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத  நிலையும் உள்ளது. எனவே கன்னிவாடி பேரூராட்சி நிர்வாகம் ஆல்டா நகருக்கு  தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உடனே நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  ஆல்டா நகரை சேர்ந்த நித்யா கூறுகையில், ‘இப்பகுதியில் கழிப்பறை வசதி  இல்லாததால் 10 ஆண்டுகளாக திறந்தவெளியைத்தான் கழிப்பறையாக பயன்படுத்தி  வருகிறோம். மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வந்தால் பாம்பு,  தேள், பூரான் உள்ளிட்ட விஷ சந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் யாரும் வீட்டை  விட்டு வெளியே வரமுடியாது’  என்றார்.

வீரன் கூறுகையில், ‘கடந்த திமுக ஆட்சியில் எங்கள் பகுதி  மக்களின் நலனுக்காக வருவாய் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி இடம்  ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதன்பின்பு அதிமுக ஆட்சியில் 10 வருடங்களாக  வருவாய்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் எங்களுக்கு பட்டாவும்  வழங்கவில்லை. பாதைக்கும் ஏற்பாடு செய்யவில்லை. இரவானால் யானை, சிறுத்தை,  காட்டு பன்றிகள் வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் நாங்கள் உள்ளோம்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்