ஓடை தூர் வாரப்படாததால் வயலில் மழைநீர் தேங்கியதால் வெங்காய செடிகள் அழுகியது
12/3/2021 12:54:23 AM
நாமகிரிப்பேட்டை, டிச.3: நாமகிரிப்பேட்டை அருகே ஓடையை தூர் வாராததால், விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காய செடிகள் அழுகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி எம்ஜிஆர் நகரில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தற்போது செடிகள் செழித்து வளர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களில் நீர் நிரம்பியுள்ளது. ஆறு, கால்வாய் மற்றும் ஓடைகளில் தண்ணீர் ஓடுகிறது. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் ஓடையை வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ஓடையை தூர்வாராததால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் ஊற்று எடுத்துள்ளது. வயலில் உள்ள நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காய செடிகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகியுள்ளது.
விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, மழையால் சேதமடைந்த நிலக்கடலை, சின்ன வெங்காய வயலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் பெற்றுத்தரவேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக ஓடையை தூர்வாரி, ஓடையின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக மழை
விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் ஆண்டுவிழா
தென்னை விவசாயிகளுக்கு மானியம்
1,107 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவர் திருவிழா, கண்காட்சி
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை