குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
12/3/2021 12:38:44 AM
திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்குள் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழையால் காக்களூர் ஏரி நிரம்பி மழைநீர் செல்ல வழியின்றி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் செய்தனர். அதன் பேரில் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
காக்களூர் ஊராட்சி ஏரி நிரம்பி கலங்கல் மடை வழியாக உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் வரைபட உதவியுடன் ஆய்வு செய்ததில் காக்களூர் ஏரிக்கரை சாலையோரம் தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. தற்போது, இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிந்தது. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கு்ப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த்துறை, பொதுப்பணித்தறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஊராட்சி தலைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ஒப்புதல் கலெக்டர் அறிவிப்பு
உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இரு தரப்பினர் திடீர் கோஷ்டி மோதல் திருவள்ளூர் அருகே பரபரப்பு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!