போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திறிந்த 9 மாடுகள், வஉசி உயிரியல் பூங்காவில் அடைப்பு
12/3/2021 12:38:05 AM
கோவை, டிச. 3: கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்து, அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வஉசி உயிரியல் பூங்காவில் அடைத்தனர். கோவை மாவட்டம் சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் புகாரின்பேரில், கால்நடகளை பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் திரியவிட்டால், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் கால்நடை உரிமையாளர்கள் மாநகராட்சி அறிவிப்பை கண்டுகொள்ளாமல் மாடுகளை சாலையில் திரியவிட்டனர். ஆகையால் சுங்கம் மற்றும் உக்கடம் பகுதிகளில் சாலையோரம் சுற்றித்திரிந்த 9 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பிடித்துச் சென்று, வஉசி உயிரியியல் பூங்காவில் அடைத்தனர். மேலும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், பெரிய மாடுகள் என்றால் ரூ. 3ஆயிரம் எனவும், அளவில் சிறிய மாடுகளுக்கு ரூ. ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை அபராதம் தொகை இருக்கும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!