2300 குடியிருப்புகளுக்கு சாக்கடை குழாய் இணைப்பு வழங்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
12/3/2021 12:37:56 AM
கோவை, டிச. 3: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் 2300 குடியிருப்புகளுக்கு உடனடியாக சாக்கடை குழாய் இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார் கோவை ராமநாதபுரம் சிக்னஸ் அருகில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள், கழிவுநீர் பண்ணையின் மூலம் சுந்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துதல் ஆகிய பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜா கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மணியகாரன்பாளையம் முதல் ஒண்டிப்புதூர் வரை 221 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகளையும், 24x7 குழாய் அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
ஒண்டிப்புதார், நெசவாளர் காலனி பகுதியில் தற்போது முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் செய்து 2300 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர் ராமசாமி, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமார் ரத்தினம், நிர்வாக பொறியாளர் (பாதாள சாக்கடை திட்டம்) உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர் சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா, உதவி செயற்பொறியார்கள் ஏழில், பெர்மன் அலி, சத்யா, ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!