அரசுப்பேருந்து ஏணியில் பயணித்த மாணவன்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ; போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவுரை
12/3/2021 12:37:44 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், புழல், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் பயணித்து படித்து வருகிறார்கள். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி பணிமனையிலிருந்து சத்தியவேடு வரை செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனை கண்ட, செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன் மற்றும் கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் போக்குவரத்து ஆணையருக்கு இதை பற்றி தகவல் தெரிவித்தனர். மண்டல போக்குவரத்து துறை இணை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று கவரப்பேட்டை பள்ளி படிக்கும் மாணவனை சந்தித்து அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது, சாலை பாதுகாப்பு வாரங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்தில் உள்ள படிக்கட்டிலும் பின்புறத்தில் உள்ள ஏணியிலும் தொங்கியபடி பயணிப்பது ஆபத்தை விளைவிக்கும். இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாணவனுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
மேலும் செய்திகள்
பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் ரூ.12.74 லட்சத்தில் சிமென்ட் சாலை
நல்லூர் ஊராட்சியில் தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியிலிருந்து ஏரி கால்வாயில் கழிவுநீர் கலப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்
பூ வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை
திருவள்ளூர் ஒன்றிய குழு கூட்டம்
எலிக்கு வைத்த உணவை சாப்பிட்ட இளம்பெண் சாவு: செங்குன்றம் அருகே சோகம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை