நெய்வேலியில் தொழிற்பயிற்சி நிலையம்
12/2/2021 4:35:01 AM
நெய்வேலி, டிச. 2: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நெய்வேலி வட்டம்- 12ல் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ரூபாய் 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டது. இந்த தொழிற்பயிற்சி மையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், ஏசி மெக்கானிக் ஆகிய நான்கு பிரிவுகளில் கீழ் 124 மாணவ, மாணவிகள் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது. சென்னையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், என்எல்சி சேர்மன் ராகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நெய்வேலியில் நடைபெற்ற தொழிற்பயிற்சியில் சேறும் மாணவர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்எல்ஏ விண்ணப்பங்களை வழங்கி சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் என்எல்சி மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன், நிதித்துறை இயக்குனர் ஜெயக்குமார் சீனிவாசன், என்எல்சி கண்காணிப்பு தலைமை அதிகாரி சந்திரசேகர், செயல் இயக்குனர்கள் மோகன், சதீஷ் பாபு, பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நெய்வேலி நகர பொறுப்பாளர் பக்கிரிசாமி, தொமுச பேரவை துணை செயலாளர் வீர ராமச்சந்திரன், நெய்வேலி என்எல்சி தொமுச தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு மற்றும் துணைத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தூய்மைப்பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர்
கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
மின் ஊழியர் சங்க வாயிற்கூட்டம்
எடையூர்-மன்னம்பாடி இடையே மேம்பாலம் அமைக்கும் பணி
பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு சிறந்த ஏற்றுமதிக்கான தங்க விருது
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை புத்தாக்க பயிற்சி
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!