SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலக்கை நிர்ணயம் செய்தால் வெற்றி சாத்தியமாகும் முன்னாள் துணைவேந்தர் பேச்சு

12/2/2021 1:44:32 AM

காரைக்குடி, டிச.2: மாணவர்கள் இலக்கை நிர்ணயம் செய்தால் வெற்றி சாத்தியமாகும் என முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தெரிவித்தார். காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பல்வேறு போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் வாசுகி வரவேற்றார். கல்விகுழும ஆலோசகர், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்து பேசுகையில்,
‘‘கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டும்தான். பாடத்தை கற்று, மனப்பாடம் செய்து எழுதும் முறைதான் கல்வி என நினைக்கிறோம். இன்றைய தேவைகளுக்கான மட்டும் குழந்தைகளை தயார் படுத்தக் கூடாது.

நாளை தேவைகளுக்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் தயார் படுத்த வேண்டும். கல்விக்கு இணையான முக்கியத்துவத்தை பிற துறைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சாதனை என்பது அனைவரும் அடையகூடியது. அதற்க உரிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அனைவரும் சாதனையாளர்கள் தான். வெற்றி என்ற இலக்கை அடைய அதனை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது தான் வெற்றி சாத்தியமாகும் என்றார். நிகழ்ச்சியில் எய்ம் ஆர்ட்ஸ் மற்றும் ட்ரை டிராகன் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட சிலம்பம், யோகா, பரதநாட்டியம், வீணை வாசித்தல், கீபோர்டு வாசித்தல் ஆகிய போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற ஸ்ரீதுர்கா, ஸ்ரீகாயத்ரி, முத்துசோலையப்பன் ஆகிய மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ncc-modi-medal-28

    டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

  • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

    ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

  • flag-drones-display-27

    காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

  • trainnnnnjobbb

    ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

  • oil-hair-peru-27

    சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்