SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி

4/23/2021 3:03:05 AM

புதுக்கோட்டை, ஏப்.23:புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் கொரோனா சிகிச்சைக்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று விகிதம் 3.7 சதவீதத்தில் உள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கி உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத்தில் தற்பொழுது 1,529 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு;ள்ளது. எனினும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் 4 தளங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஒரு தளம் மருத்துவர்கள் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கும் நபர்கள் தங்கும் வகையிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் தேவைப்படும் பொழுது இந்த மையம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதேபோன்று அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையமும் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் மீண்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் பங்கு பெறும் முகவர்கள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் வருகின்ற 24 ம் தேதி சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவலர்களுக்கு ஆயுதப்படை மைதானத்திலும், அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகர்வர்களுக்கு சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்திலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் அனைவருக்கும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சம்மந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்