கிராமங்களில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும் அமமுக வேட்பாளர் உறுதி
4/23/2021 1:42:46 AM
தொண்டி, மார்ச் 24: திருவாடானை சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக வ.துந.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் கிராமங்கள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கிராமங்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி மேம்படுத்தப்படும் என்று நேற்று உறுதி அளித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கிராமங்கள் தோறும் இவர் நன்கு அறிமுகமானவர் என்பதால், வாக்காளர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. நேற்று புல்லூர், பனஞ்சாயல் புலியூர் ப.தனக்குடி, ஓரியூர், புதுவயல், எஸ்பி.பட்டினம், தீர்த்தாண்டதானம், மருதவயல், மாணவ நகரி, பாசிப்பட்டினம் வட்டம் கொடிபங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களின் அடிப்படை தேவையான குடிதண்ணீர் நிரந்தரமாகவும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் சாலைகள் மேம்படுத்தப்படும். மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!