பெரம்பலூரில் ரோலர் ஸ்கேட்டிங் கோடைக்கால பயிற்சி துவக்கம் சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
4/19/2021 3:12:00 AM
பெரம்பலூர்,ஏப்.19: பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தில் கோடை பயிற்சி தொடங்கியது. சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்பு. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக அரசு சார்பாக பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையொட்டி கிழக்கு புறத்தில் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பாக சாலையோரங்களில் நடத்தப்பட்டு வந்த ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியை கண்டு 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கலெக்டர் விஜயக்குமாரின் முதல் முயற்சியால், பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் கொண்டுவரப்பட்டது.
ஆரம்ப கட்டத்திலேயே நிதிப்பற்றாக்குறையால் 14 மாதங்கள் கான்கிரீட் கட்டுமான பணிகளோடு நின்றுபோன பணிகள், கலெக்டர் நந்தக்குமார் முயற்சியால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதியை கொண்டு மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தும் நிதி கொடுத்து உதவிய ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதால் முறையான பராமரிப்பின் றி புதர்கள்மண்டி, மரங்கள் மைதானத்திற்குள் முளைத்து கிடந்தன. தற்போது பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பாக கோடைகால பயிற்சிக்காக மைதானத்தின் வடக்கு தெற்கு பகுதிகளில் உள் வட்டத்திலும், சுற்றிலும் உள்ள செடிகளை, புதர்களை அகற்றி பயிற்சிக்கு ஏற்றப்படி சுத்தம் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!