SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி

4/18/2021 4:05:40 AM


புதுச்சேரி, ஏப். 18: புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 715 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது செப்டம்பர் 24ம் தேதி அதிகபட்சமாக 668 பேர் தான் பாதிக்கப்பட்டு இருந்தனர். இப்போது அதை விட பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 4,748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-567, காரைக்கால்-88, ஏனாம்-35, மாகே-25 என மொத்தம் 715 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 47,108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3,369 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தமாக 4,090 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,313 (89.82 சதவீதம்) ஆக உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 7,24,132 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 6,59,076 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள் 29,952 பேர், முன்கள பணியாளர்கள் 17,672 பேர், பொதுமக்கள் 1 லட்சத்து 664 பேர் என மொத்தம் 1,48,288 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-teacher-2

    இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

  • dog-police-2

    சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

  • MKStalin_Inspectetd_Thoothukudi

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • IncomeTax_Raid_SaravanaStores

    சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

  • Landslide_Tirupati

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்